மேலும்

நாள்: 30th September 2026

கோட்டாவுக்கு நினைவில் இல்லையாம் – நீதிமன்றில் சாட்சியம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் குறித்த விவரங்களோ அல்லது அந்தச் சம்பவம் தொடர்பாக யாரேனும் தன்னைத் தொடர்பு கொண்டார்களா என்பது குறித்தோ, தனக்கு நினைவில் இல்லை என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

பாஜக தலைவர்களுடன் ரில்வின் சில்வா குழுவினர் தொடர் சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச் செயலர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் பாஜகவின் உயர் மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.

தேசிய மனித உரிமைகள் பரிசோதனைப் பொறிமுறை – ஐ.நாவுக்கு சிறிலங்கா விளக்கம்

ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளப்படும் சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்தும்,  தேசிய மனித உரிமைகள் பரிசோதனைப் பொறிமுறை குறித்து ஐ.நாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார்.

ஈரான்- சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

நியூயோர்க்கில் நடைபெறும்  ஐ.நா பொதுச் சபையின்  81வது கூட்டத்தொடரில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பொதுவாக்கெடுப்பு நடத்துவதில் இருந்து பின்வாங்கும் சிறிலங்கா அரசாங்கம்

ஊழல் ஒழிப்பு திருத்த சட்டமூலத்தின் 17-வது பிரிவுக்கு மக்கள் ஒப்புதல் தேவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தும் எண்ணம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.