தடை செய்யப்பட்ட அமைப்பின் சின்னங்களுக்கு அனுமதியில்லை
தடை செய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவிப்பதைச் சட்டம் அனுமதிக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் உருவச் சிலை அகற்றப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடிகள், சின்னங்கள் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதை நாட்டின் சட்டங்கள் அனுமதிக்கவில்லை.
அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிலையை அகற்றுவதற்கு முன்னதாகவே சிறிலங்கா காவல்துறை நீதிமன்றத்தில் உண்மைகளைச் சமர்ப்பித்திருந்தது.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கிறது.
நினைவேந்தல் நிகழ்வுகளில் இதற்கு முன் புகைப்படங்களே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அந்த இடத்தில் சிலை நிறுவப்பட்டது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
