மேலும்

ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

நியூயோர்க்கில் நடைபெறும் 81வது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரசை சந்தித்துக் கலந்துரையாடினார்.

சிறிலங்காவின் பொருளாதார மீட்சி மற்றும் சீர்திருத்தத் திட்டம், நல்லிணக்க முயற்சிகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்துலக நிதிக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஐ.நா.வின் செயல்பாட்டு ஆதரவுக்கான பிரதிப் பொதுச்செயலாளர் அதுல் காரேவையும் தனியாகச்  சந்தித்து,  சிறிலங்காவின் அமைதிகாக்கும் படையினருக்கு வழங்கப்படும் ஆதரவிற்குப் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *