மேலும்

மாதம்: August 2026

இந்தியாவின் சந்தேகத்தை தீர்த்து வைத்தோம்- மனோ கணேசன்

சிறிலங்காவிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய வெளியுறவுச் செயலர் வாக்குறுதி

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம்  இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி உறுதியளித்துள்ளார்.

விமல், உதய, திலித் உள்ளிட்ட 6 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சர்வஜன பலய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தினார் விக்ரம் மிஸ்ரி

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் அரசியலமைப்பு விதிகளை முழுமையாகச் செயற்படுத்துமாறும், சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.

5 ஆண்டுகளில் 34,000 பேர் சிறிலங்கா முப்படைகளில் இருந்து வெளியேறினர்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 34,000 க்கும் மேற்பட்டோர்  சிறிலங்காவின் முப்படைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

350 மில்லியன் டொலர் கடன் குறித்து சிறிலங்கா- இந்தியா இடையே உடன்பாடு

டிட்வா புயலுக்குப் பின்னர், இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்பு உதவித்  தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் டொலர் கடன் வசதிகள் குறித்து சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இன்று உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கொழும்பு வந்தார் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை சிறிலங்காவை  வந்தடைந்தார்.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் கவனமாக செயற்பட இந்தியத் தூதுவர் அறிவுறுத்து

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா,  ஆறு தமிழ்ப்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , நாளை சிறிலங்காவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.