மேலும்

5 ஆண்டுகளில் 34,000 பேர் சிறிலங்கா முப்படைகளில் இருந்து வெளியேறினர்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 34,000 க்கும் மேற்பட்டோர்  சிறிலங்காவின் முப்படைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2022,  2024-ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட இரண்டு பொதுமன்னிப்புக் காலங்களைப் பயன்படுத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிலங்கா இராணுவத்திலிருந்து 31,088 பேரும், கடற்படையிலிருந்து 2,501 பேரும், விமானப்படையிலிருந்து 1,394 பேரும் வெளியேறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *