மேலும்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டார்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராகப் பணியாற்றியபோது, ​​அதிபர் செயலகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களைத் தனது தனிப்பட்ட அலுவலகத்தில் பணிபுரிய நியமித்தார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே அகில விராஜ் காரியவசம்,  சாட்சியம் அளிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அகில விராஜ் காரியவசம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டதை அடுத்து, அவரை வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *