கொழும்பு வந்தார் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார்.
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய இந்திய வெளியுறவுச் செயலரை, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் , பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட மூத்த அரசாங்கத் தலைவர்களை இன்று மதியம் வரை சந்திக்கவுள்ளார்.
இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளையும், மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியாக அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

