மேலும்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , நாளை சிறிலங்காவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பில்  சிறிலங்கா அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதுடன்,  இனப்பிரச்சினைக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு, மூலோபாய இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில்  அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து, இந்திய வெளிவிவகாரச் செயலர் விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அத்துடன்,  வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளையும்,  இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது, 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுடன் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த, சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் க் கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *