மேலும்

அமெரிக்க, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற,  33வது ஆசியான் பிராந்திய மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக,  நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கும்  சிறிலங்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக விஜித  ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தப் பயணத்தின் போது அவர்,  இந்திய வெளிவிவகார  அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்> பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மொகமட் இஸ்ஷக் தர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மற்றும் எகிப்து, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *