மேலும்

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ் உதயகிரி

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் உதயகிரி போர்க்கப்பல், சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று, காலை  கொழும்பு துறைமுகத்தை  வந்தடைந்துள்ளது.

கடற்படை மரபுகளுக்கு இணங்க, இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படை வரவேற்றது.

149.02 மீட்டர் நீளமுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு கப்டன் விகாஸ் சூட் தலைமை தாங்குகிறார்.

கப்டன் சூட் ,  2020 ஜூலை முதல்  2023 ஒக்டோபர் வரை கொழும்பில் உள்ள  இந்திய தூதரகத்தில்  பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றியிருந்தார்.

இந்தப் பயணத்தின் போது, ​​மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், மேற்கு கடற்படை தளபதி றியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வாவை கப்டன் சூட் சந்திக்கவுள்ளார்.

சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, ​​ஐ.என்.எஸ் உதயகிரியின் குழுவினர், இரு கடற்படைகளுக்கும் இடையே தோழமையை வலுப்படுத்தவும் உறவுகளை மேம்படுத்தவும் சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்ச்சியான நல்லெண்ண நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள்.

இந்திய கடற்படை மாலுமிகள்  பல முக்கிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் தலங்களையும் சுற்றிப் பார்க்க உள்ளனர்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங்கின் பயணத்தை முன்னிட்டு இந்தியப் போர்க்கப்பல் கொழும்பு வந்துள்ளதுடன், இந்தப் போர்க்கப்பலில் வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *