மேலும்

மாதம்: April 2026

இணைய ஊடுருவிகளிடம் சிக்கிய 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம்

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து, முன்னெடுத்த நிதித் திருட்டு தொடர்பாக சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு- குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

வெளிநாட்டுக் கடன் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

காணாமல் போன 2.5 மில்லியன் ரூபா பணம்- விசாரிக்க 5 பேர் கொண்ட குழு

அவுஸ்ரேலிய கடனுக்கான தவணையாகக் கொடுப்பனவாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் காணாமல் போனது குறித்து விசாரிக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமித்துள்ளது.

நீதிவானிடம் சாட்சியமளிக்க சுரேஷ் சாலே விருப்பம்- ஒரு மாத அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான தடுப்புக் காவல் உத்தரவை, கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமரா நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

2 மாதங்களுக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள்  இறுதி செய்யப்படும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை

செயல்பாட்டுப் பணிகள் மற்றும் பயிற்சிப் பயணமாக,  இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் நிரீக்சக் (INS Nireekshak), நேற்று கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாக, சிறிலங்கா  கடற்படை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அருகே ஈரானிய மசகு எண்ணெயுடன் சென்ற கப்பலை மடக்கியது அமெரிக்கா

ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்தியதற்காக, முன்னர் தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றை, சிறிலங்காவுக்கு அருகே,  அமெரிக்க படைகள் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன.

ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு – சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆராய உத்தரவு

சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில், ஈரானியப் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறு, கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, உத்தரவிட்டுள்ளது.

தீபச்செல்வனின் புத்தகங்கள் தடுப்பு- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரிக்க தயார்

எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த தயாராக இருப்பதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் தீவிரமடையும் இந்திய- சிறிலங்கா மூலோபாயப் போட்டி

சிறிலங்காவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மூலோபாயப் போட்டி, துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பிலிருந்து, எரிசக்தித் துறைக்கு நகர்ந்து, மேலும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.