இந்தியக் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை
செயல்பாட்டுப் பணிகள் மற்றும் பயிற்சிப் பயணமாக, இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் நிரீக்சக் (INS Nireekshak), நேற்று கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
கொமாண்டர் சைலேஷ் குமார் தியாகி தலைமையிலான, இந்த சுழியோடல் ஆதரவுக் கப்பல், சிறிலங்கா கடற்படையின் சுழியோடும் வல்லுநர்களுடன் ஒரு பயிற்சியில் பங்கேற்கவுள்ளது.
அத்துடன் சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல செயல்பாடுகளிலும் இந்தக் கப்பல் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
அவர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடுவார்கள் என்று சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.

