மேலும்

காணாமல் போன 2.5 மில்லியன் ரூபா பணம்- விசாரிக்க 5 பேர் கொண்ட குழு

அவுஸ்ரேலிய கடனுக்கான தவணையாகக் கொடுப்பனவாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் காணாமல் போனது குறித்து விசாரிக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமித்துள்ளது.

இந்தக் குழுவில் திறைசேரியின் இரண்டு பிரதிச் செயலாளர்களான ஏ. என். ஹபுகல மற்றும் எஸ். எஸ். முதலிகே ஆகியோர் இதன் இணைத் தலைவர்களாக இருப்பார்கள் என்று நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே. டி. ஐ. பிரேமரத்ன, சட்ட விவகாரங்கள் திணைக்களத்தின் கூடுதல் பணிப்பாளர் நாயகம் ஏ. கே. டி. டி. அரந்தர, மற்றும் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் இ. டி. சிரந்தா ஆகியோர் மற்ற உறுப்பினர்களாவர்.

மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்ட மோசடியான பணப்பரிவர்த்தனை அறிவுறுத்தல்களின் அபாயத்தை விசாரிக்கும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பப்பட்ட நிதி காணாமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, விரைவில்  அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *