மேலும்

மாதம்: August 2025

ஆய்வுக்கப்பல்களுக்கான வழிகாட்டுமுறைகள்- இன்னமும் இழுபறியில்

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பில்  நுழைவது தொடர்பான, நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை  உருவாக்கும் முயற்சிகள் இன்னமும் நிறைவடையவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்காவுக்கான தூதுவராக பொறுப்பேற்றார் உதேனி ராஜபக்ச

தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவராக, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச பொறுப்பேற்றுள்ளார்.

“ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து“ -போராட்டத்திற்கு அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்துவதை எதிர்ப்போம், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை, ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு விகாரைகளை அரசிதழில் வெளியிட கோருகிறது அமரபுர பீடம்

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளை அரசிதழில் வெளியிட்டு அவற்றை வழிபாட்டு இடங்களாக பிரகடனம் செய்ய வேண்டும் என, அமரபுர மகா சங்க சபா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

3 தமிழ் இளைஞர்களை தேடுகிறது பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு

வடக்கைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை தேடுவதாக சிறிலங்கா காவல்துறையின், பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு (CTID) அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் ஐ.நா ஆய்வுக்கப்பல்

 ஐ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின் கொடியுடனான டொக்டர் பிரிட்ஜோவ்  நான்சன் என்ற கடல் சார் ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

முத்தையன்கட்டு இளைஞன் மரணம்- 2 இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்

முல்லைத்தீவு- முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக- கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் இருவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது

சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை தட்டிக்கழிக்க அரசாங்கம் முயற்சி

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழிக்க முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.