மேலும்

வடக்கு, கிழக்கு விகாரைகளை அரசிதழில் வெளியிட கோருகிறது அமரபுர பீடம்

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளை அரசிதழில் வெளியிட்டு அவற்றை வழிபாட்டு இடங்களாக பிரகடனம் செய்ய வேண்டும் என, அமரபுர மகா சங்க சபா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அமரபுர மகா சங்க சபாவின் பொதுச்செயலாளர் வண. பலபிட்டியே சிறி சீவலி தேரர்,

இன்று வடக்கு , கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலங்கள், பௌத்த சிதைவுகள், மடங்கள் மற்றும் கல்வெட்டுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு இனக்குழுக்கள் அவற்றைப் பாதுகாக்க அனுமதிக்கவில்லை.

வடக்கு, கிழக்கில் உள்ள வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் போது, மகா சங்கத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

அந்த முயற்சியில் சிலர் தங்கள் உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டியிருந்தது.

எனவே, நகரங்களில் உள்ளதைப் போலவே வடக்கு , கிழக்கில் உள்ள பௌத்த வழிபாட்டுத் தலங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டு, வழிபாட்டுத் தலங்களாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்காலத்திற்காகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்  பலபிட்டியே சிறி சீவலி தேரர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *