மேலும்

நாள்: 17th August 2025

மணியந்தோட்டத்திலும் மனிதப் புதைகுழிகள் – சோமரத்ன ராஜபக்ச தகவல்

அரியாலை – மணியம்தோட்டம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பலர் புதைக்கப்பட்டுள்ளதாக, கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் 6 துப்பாக்கிதாரிகளை கைது செய்ய சிஐடி நடவடிக்கை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ், பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை  கைது செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக சிங்கள வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு தீவிர பரப்புரை

சிறிலங்கா அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் இலக்காக கொண்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான பிரச்சாரங்களால், வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வலியுறுத்தியுள்ளார்.

ரோம் சட்டத்தில் சிறிலங்கா தற்போது இணையாது

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய, ரோம் சட்டத்தை சிறிலங்கா, தற்போது அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடிவு

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.