மேலும்

நாள்: 9th August 2025

6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது – மூவருக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு- முத்தையன்கட்டுக் குளம் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து 6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முத்தையன்கட்டில் சிறிலங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு  சிறிலங்கா இராணுவ முகாமில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதாக அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், காணாமல் போன நிலையில் அடிகாயங்களுடன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எல்லைக் கிராமங்களில் செய்ய வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் என்ன?

வவுனியா வடக்கின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான சேனைப்புலவில் வாழ்வாதாரம் தேவைப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு, மருத்துவர் உதயசீலன் கற்கண்டு பொறியியலாளர்   மணிவண்ணன் தனுசன்  ஆகியோர் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்போடு இணைந்து விவசாய தேவைக்கான கிணறு ஒன்றினை அமைத்துக் கொடுத்திருந்தனர்.

இந்தியர்கள் அதிகளவில் தாக்கப்படும் நாடு சிறிலங்கா

வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் சிறிலங்காவிலேயே அதிகம் நிகழுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா விமானப்படைக்கு புதிய கருவிகளை வழங்கியது அமெரிக்கா

விமானங்களுக்கு எரிபொருள் மீள் நிரப்பும் இரண்டு உயர்வலு சாதனங்களை சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா,  கொடையாக வழங்கியுள்ளது.

புதிதாக 70 அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பம்

சிறிலங்காவில் சுமார் 70 அரசியல் கட்சிகள் புதிய பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்,  சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.