ஆய்வுக்கப்பல்களுக்கான வழிகாட்டுமுறைகள்- இன்னமும் இழுபறியில்
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பில் நுழைவது தொடர்பான, நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை உருவாக்கும் முயற்சிகள் இன்னமும் நிறைவடையவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பாக, எழுந்த சர்ச்சைகளை அடுத்து, ஆய்வுக்கப்பல்களை அனுமதிப்பது தொடர்பாக, நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவதற்கென, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இந்தக் குழு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட போதும், இன்னும் அதன் மீளாய்வை நிறைவு செய்யவில்லை என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான, வழிகாட்டுதல்களை, இறுதி செய்வதற்கு முன்னர், தொடர்புடைய பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் நடந்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
