“ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து“ -போராட்டத்திற்கு அழைப்பு
ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்துவதை எதிர்ப்போம், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் குமணன் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவினரால் 7 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ள நிலையில் ஊடக அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன இணைந்து கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இன்று காலை 9 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
