முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது
சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், மீரிஹானவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டு, காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரகலய போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உதவினார் மற்றும் ஒத்துழைத்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தனது கடமையைச் செய்வதற்கு தவறினார் என்றும் தேசபந்து தென்னகோன், குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
