மேலும்

மாதம்: July 2019

அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.

ஹேமசிறி, பூஜிதவை ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் உள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மரணதண்டனை நிறைவேற்றும் நாள் அறிவிக்கப்படவில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு தொடர்பாக, அதிபர் செயலகமோ, நீதி அமைச்சோ இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என்று, மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாவைச் சந்தித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

சிங்கப்பூரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.

மாணவர்கள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட 13 அதிரடிப்படையினரும் விடுதலை

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 13 பேரும், குற்றங்களை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4

தெற்காசியப் பிராந்தியத்தில் மிகச்சிறிய இன அடையாளத்தை கொண்ட ஒரு அலகினால், அதீத மதவாத சிந்தனையின் பால் சார்ந்து,  நன்கு திட்டமிட்ட வகையில் தனது சவால்களை எதிர் கொள்வது மட்டுமல்லாது,  இதர இன அடையாளங்களை துல்லியமாக ஜனநாயகத்தின் பெயரால் பெளத்த மேலாண்மைக்குள் உள்ளாக்கக் கூடிய ஒரு தகைமையை சிறிலங்கா அரச திணைக்களங்களும்,  பௌத்த மதபீடங்களும் கொண்டிருக்கின்றன.

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி – நாளை மறுநாள் ஆரம்பம்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுநாள், ஆரம்பிக்கப்படவுள்ளன.

சோபாவின் தாக்கங்கள் குறித்து ஆராய இரண்டு குழுக்கள- மகிந்தவினால் நியமனம்

அமெரிக்காவுடன் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ள சோபா உடன்பாட்டின் உள்ளடக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, இரண்டு குழுக்களை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.

அதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி

2019 அதிபர் தேர்தல் முடிவடையும் வரை, அமெரிக்காவுடனான சோபா உடன்பாடு குறித்த இறுதி முடிவை தாமதிக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு என, அவரது சார்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஹேமசிறியும், பூஜிதவும் மருத்துவமனைகளிலேயே  விளக்கமறியல்

கொழும்பு மருத்துவனைகளில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும், இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.