மேலும்

மாதம்: July 2019

அதிபரின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரமில்லை – சட்டமா அதிபர்

சிறிலங்கா அதிபரின் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று சட்டமா அதிபர் நேற்று அடிப்படை எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றிலும் மைத்திரிக்கு ‘ஆப்பு’ வைக்க ஆளும்கட்சி திட்டம்

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கத் தரப்பு முடிவு செய்துள்ளதாக ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘என் உயிருக்கு ஆபத்து’ – மீண்டும் புலம்பத் தொடங்கியுள்ள சிறிலங்கா அதிபர்

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹேமசிறி பெர்னான்டோவும், பூஜித ஜயசுந்தரவும் சிஐடியினரால் கைது

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.

சிறிலங்காவில் அமெரிக்க தளத்தை நிறுவும் நோக்கம் இல்லை – அலய்னா

சிறிலங்காவில் அமெரிக்கப் படைத்தளத்தை நிறுவுகின்ற நோக்கமோ, திட்டமோ கிடையாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹேமசிறி, பூஜிதவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும் கைது செய்யுமாறு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 32.83 பில்லியன் டொலர்

சிறிலங்காவுக்கு, 32.83 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாக நிதியமைச்சின் நடு ஆண்டு நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மரண தண்டனை  – வெளிநாட்டுத் தூதுவர்கள் ரணிலிடம் அதிருப்தி

மரண தண்டனையை மீண்டும்  நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவினால் வெளிநாட்டுத் தூதுவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு

அனைத்துலக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவியுடனேயே, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மரணதண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக, சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரே நாளில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.