மேலும்

மாதம்: June 2019

கல்முனையில் ஒருவரின் உண்ணாவிரதம் தொடர்கிறது- களத்தில் ஞானசார தேரர்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர்ந்த ஏனையோர், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1 பில்லியன் யென் கொடை வழங்குகிறது ஜப்பான்

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, ஜப்பான் 1 பில்லியன் யென், நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

சஹ்ரான் குறித்த சாட்சியத்தை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்

தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் காசிம் அக்கரைப்பற்று வந்தது தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியதாக, இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஏ.கே.ஹாசிம் கூறியிருப்பதை சிறிலங்கா இராணுவம் நிராகரித்துள்ளது.

அவசரகாலச்சட்டம் மீண்டும் நீடிப்பு

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா, இந்தியாவுக்கு ஐஎஸ் அமைப்பினால் அச்சுறுத்தல் – புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

சிரியா மற்றும் ஈராக்கில் தமது பகுதிகளை இழந்ததை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மீது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கவனம் திரும்பியுள்ளதால், இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும் என்று இந்திய புலனாய்வு அறிக்கைகள் எச்சரித்துள்ளன.

மைத்திரியே வேட்பாளர் – என்கிறார் மகிந்த

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரும் அதிபர் தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே, நிச்சயமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச தான் அடுத்த அதிபர் – அடித்துச் சொல்கிறார் தலதா

அமைச்சர் சஜித் பிரேமதாச நிச்சயமாக நாட்டின் அடுத்த அதிபராக இருப்பார் என்று  சிறிலங்காவின் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள  தெரிவித்தார்.

பொம்பியோவின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும் ‘சோபா’வுக்கும் தொடர்பு இல்லை

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் சிறிலங்கா பயணம் ரத்துச் செய்யப்பட்டதற்கும், ‘சோபா’ உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் முன்னெடுக்கப்பட்டு வரும், உண்ணாவிரதப் போராட்டமும், அதற்கு ஆதரவான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.

கம்போடியா பயணத்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு,, இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.