மேலும்

நாள்: 28th June 2019

சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா ஆர்வம்

சிறிலங்காவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக ரஷ்ய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல்  வலேரி ஜெராசிமோவ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து இந்திய – ஜப்பான் பிரதமர்கள் ஆலோசனை

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் உட்கட்டமைப்புத் திட்டங்களை கூட்டாக முன்னெடுப்பது குறித்து ஜப்பானிய – இந்திய பிரதமர்கள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

அமெரிக்க உடன்பாடு குறித்து எச்சரிக்கிறார் பாலித கொஹன்ன

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், பாதுகாப்பு உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில், இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் மோதல் போக்கை ஏற்படுத்தக் கூடிய  உடன்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின்  முன்னாள் வெளிவிவகாரச் செயலர் கலாநிதி பாலித கொஹன்ன.

அமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர

அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து,  வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

காத்தான்குடியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு- காத்தான்குடி அருகேயுள்ள ஒல்லிக்குளம் பகுதியில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

மரணதண்டனைக்கு அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்பு

சிறிலங்காவில் 4 கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆணையிட்டுள்ள நிலையில், அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்புத் தோன்றியுள்ளது.

கொலைப் பின்னணி கொண்ட கோத்தாவுக்கு ஆதரவு இல்லை – குமார வெல்கம

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வேட்பாளராகப் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.