மேலும்

நாள்: 13th June 2019

அடுத்தவாரம் வழமைபோல அமைச்சரவை கூடும் – அரச அதிகாரி உறுதிப்படுத்தினார்

சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம், வரும் 18ஆம் நாள், செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு மேலதிக இராணுவ உதவி – 30 மில்லியன் டொலர் கோருகிறது ட்ரம்ப் நிர்வாகம்

தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில், சிறிலங்கா, பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு, 30 மில்லியன் டொலரை, வெளிநாட்டு இராணுவ நிதி உதவியாக  வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளது டிரம்ப் நிர்வாகம்.

தீவிரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலருடன் பேசவுள்ள சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவுக்கு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவுடன், தீவிரவாத முறியடிப்பு, இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரவாத முறியடிப்புக்கு ஜப்பானும் உதவுவதாக வாக்குறுதி

சிறிலங்காவுக்கு தீவிரவாத முறியடிப்புக்கான கருவிகள் மற்றும் பயிற்சி உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பானின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ரொஷிகோ அபே, நேற்று அலரி மாளிகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார்.

அமைச்சரவையை கூட்டுமாறு சிறிலங்கா அதிபரை கோரும் தீர்மானம் –  அரசாங்கம் முயற்சி

சிறிலங்கா அதிபருக்கும், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரும் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐதேமு அரசாங்கம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்துலக கடப்பாடுகளை அடுத்த அரசாங்கமும் மதிக்க வேண்டும்- அமெரிக்கா

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்துலக கடப்பாடுகளை சிறிலங்காவின் எதிர்கால அரசாங்கங்கள் மதிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக,  கொழும்பில்  உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்

இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.