மேலும்

நாள்: 5th June 2019

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பதவி ஐதேகவுக்கு- மைத்திரி இணக்கம்

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பதவியை ஐதேகவைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

போட்டியில் இருந்து விலகுகிறார் மைத்திரி – ஐதேக பக்கம் சாய்கிறார்

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

படகில் வருவோருக்கு ஒருபோதும் புகலிடம் கிடையாது – அவுஸ்ரேலிய அமைச்சர்

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக இன்னமும் கடுமையான கொள்கையையே அவுஸ்ரேலியா பின்பற்றுகிறது என்றும், படகு மூலம் அவுஸ்ரேலியா செல்பவர்களின் புகலிடக் கோரிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பே இல்லை என்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் குழுவின் 32 பேருக்கு ஊதியம் கொடுத்த மகிந்த அரசு – அரசின் கையில் சான்றுகள்

தீவிரவாதி சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நிதி கொடுப்பனவுகளை வழங்கியது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல் நாளை சிறிலங்கா கடற்படையில் இணைப்பு

அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளவுள்ளார்.

மகிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனம் – மைத்திரி நிராகரிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாவனைக்காக, குண்டுதுளைக்காத வாகனத்தைக் கொள்வனவு செய்யும் யோசனைக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடங்கள் நிரப்புவதில்லை – ரணில் முடிவு

பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடைங்களை நிரப்புவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

புலனாய்வு அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து – மகிந்த

நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் அளிக்கப்படும் சாட்சியங்களினால், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை – ஜூலை 9, 10 இல் விவாதம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, ஜூலை 9ஆம், 10ஆம் நாள்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.