மேலும்

நாள்: 6th June 2019

பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை – பூஜித் ஜயசுந்தர பரபரப்பு சாட்சியம்

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தம்மைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபா சிறிசேன கூறியிருந்தார் என, கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சாட்சியம் அளித்துள்ளார்.

‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – ஒஸ்லோவில் இன்று புத்தக அறிமுக அரங்கு

‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள்,  என்ற பேராசிரியர் Øivind Fuglerudஇன் புத்தக அறிமுக அரங்கு ஒஸ்லோவில் இன்று இடம்பெறுகின்றது.

சிறிலங்காவுக்கு உதவும் 20 அவுஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகள்

ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான  விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்ரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை சிறிலங்காவுக்கு அனுப்பியிருப்பதாக, அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்தார்.

அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகளுக்கிடையில் கூடுதல் பயிற்சி வாய்ப்புகள் குறித்து பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல், இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், கிழக்கு கடற்படைத் தலைமையகத்துக்கும், கண்ணிவெடிகளை அகற்றும் பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

குருநாகல மருத்துவருக்கு எதிராக முஸ்லிம் பெண்ணும் முறைப்பாடு

சிங்களப் பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்படும் குருநாகல மருத்துவமனை மகப்பேற்று நிபுணர் செய்கு சியாப்தீனுக்கு எதிராக முஸ்லிம் பெண் ஒருவரும்  நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் நாடகமா? – அதிபருக்கு கடிதம் அனுப்பப்படவில்லை

அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களினதும் பதவி விலகல் கடிதங்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பதவியேற்குமாறு பௌத்த பீடங்கள் அழைப்பு

பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறும், நாட்டு மக்களுக்கான கடமையை நிறைவேற்றுமாறும், மூன்று பௌத்த பீடங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

சிறிலங்காவுக்கு நவீன இராணுவ கருவிகளை அனுப்புகிறது சீனா

கண்காணிப்பு கருவிகளை வழங்குமாறு சிறிலங்காவிடம் இருந்து சீனாவுக்கு கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழு முன்பாக பூஜித, ஹேமசிறி இன்று சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக, சாட்சியமளிக்க, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.