மேலும்

நாள்: 17th June 2019

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் கம்போடியா பறக்கிறார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கம்போடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே சிறிலங்கா அதிபர், இரண்டு நாட்கள் பயணமாக நொம்பென்னுக்கு செல்லவுள்ளார்.

படையினரைக் கொன்றதாக குற்றச்சாட்டு – முன்னாள் புலிகளுக்கு எதிராக வழக்கு

போர்க்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இந்த மாதம் 24 ஆம் நாள் தொடக்கம் விசாரிக்கப்படவுள்ளது.

புடினுக்கு அழைப்பு விடுத்தார் சிறிலங்கா அதிபர் – அமெரிக்காவின் தடை குறித்தும் பேச்சு

ரஷ்யாவில் இருந்து சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது, அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக, சிறிலங்கா, ரஷ்ய அதிபர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

பதில் அமைச்சர்கள் நியமன மோதல் உச்சம் – பணியாற்ற வேண்டாமென ரணில் உத்தரவு

ஐதேகவைச் சேர்ந்த பதில் அமைச்சர்களான, லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை, அந்தப் பதவிகளுக்கான கடமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

குழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள்

அரச பாதுகாப்பு  அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்கக் கூடாது என, சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள உத்தரவை அடுத்து, தெரிவுக்குழு விசாரணை நெருக்கடியில் சிக்கியுள்ளது.