மேலும்

நாள்: 29th June 2019

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் அழைப்பை நிராகரித்த தயாசிறி  சிக்கலில் மாட்டுவாரா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே சோபாவில் கையெழுத்து – ருவன் விஜேவர்த்தன

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள  சோபா உடன்பாட்டின் நிபந்தனைகள், சிறிலங்காவுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே, அந்த உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

றிசாத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை- பதில் காவல்துறை மா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் அல்லது எந்தவொரு தீவிரவாத செயற்பாடுகளுடனும், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரமும் இல்லை என சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

7 நாட்களுக்குள் தூக்கு இல்லை- சிறைச்சாலைகள் ஆணையாளர் உறுதி

அடுத்த 7 நாட்களுக்கு எந்த சிறைக்கைதியும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், உறுதி அளித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள்

சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், இராணுவ செயலகம், புதிய நியமனங்களை அறிவித்துள்ளது.