மேலும்

நாள்: 3rd June 2019

முஸ்லிம் அமைச்சர்கள் கூண்டோடு பதவி விலகல்

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.

அசாத் சாலி, ஹிஸ்புல்லா பதவி விலகினர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம், மற்றும் அவருக்கு ஆதரவாக தீவிரமடைந்து வந்த போராட்டங்களை அடுத்து, மேல் மாகாண ஆளுநர், அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.

கண்டியில் இன்று வணிக நிலையங்களை மூடி தேரரின் போராட்டத்துக்கு ஆதரவு

தலதா மாளிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டம், இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், கண்டி நகரில் இன்று வணிக நிலையங்களை அடைத்துப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

ரணிலைச் சந்திக்கிறார் மகிந்த – இன்று நடக்கிறது இரகசியப் பேச்சு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அசாத் சாலியை நீக்கி விட்டு பீலிக்ஸ் பெரேராவை மேல் மாகாண ஆளுநராக நியமிக்க திட்டம்

மேல் மாகாண ஆளுநராக உள்ள அசாத் சாலிக்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் யோசனை ஒன்று சிறிலங்கா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள். தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடன் உறவுகளைப் பலப்படுத்த ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுடனான உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் படைகள் முகாமிட இடமளியேன் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவுக்குள் வெளிநாட்டுப் படையினர் தளம் அமைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.