மேலும்

நாள்: 17th February 2019

மற்றொரு கடற்படைப் புலனாய்வு அதிகாரியைக் கைது செய்யும் முயற்சியில் சிஐடி

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் நெருங்கிய உதவியாளராக இருந்த கடற்படை அதிகாரி ஒருவரை, கைது செய்யும் முயற்சியில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இறங்கியுள்ளனர்.

கடல்சார் பாதுகாப்புக்காக சிறிலங்காவுக்கு நவீன கப்பலை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்காவின் கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, ஆதரவளிக்க முன்வந்துள்ள ஜப்பான், இதற்காக கப்பல் ஒன்றையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

பான்டா, சாமுராய் பிணை முறிகளின் மூலம் 1 பில்லியன் டொலர் திரட்ட நடவடிக்கை

அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டதை அடுத்து, சீனாவின் பான்டா, ஜப்பானின் சாமுராய் பிணை முறிகளின் மூலம், 1 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டும் நடவடிக்கையில் சிறிலங்கா மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

சிறிசேனவை போட்டியில் நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளரை களமிறக்க பசில் திட்டம்

அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த மகிந்த ராஜபச்ச முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 8இல் வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வரும் மார்ச் 8ஆம் நாள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா அதிகாரியை அச்சுறுத்திய இராணுவத்தினர் – சிறிலங்கா அதிபரிடம் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் ஐ.நா அதிகாரி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

புதன்கிழமையே வெளியாகும் மன்னார் புதைகுழி இரகசியம்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் காலத்தை அறிவதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட றேடியோ கார்பன் பரிசோதனை  அறிக்கை வரும் புதன்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் ஈரானிய போர்க்கப்பல்கள்

ஈரானியக் கடற்படையின் மூன்று கப்பல்கள் பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

சிறிலங்கா – ஜப்பான் கடற்படை அதிகாரிகளுக்கிடையில் முதலாவது கலந்துரையாடல்

சிறிலங்கா- ஜப்பானிய கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது, அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் கொழும்பில் கடந்த 14ஆம், 15ஆம் நாள்களில் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு உறவுகள் குறித்து சிறிலங்கா- அமெரிக்கா பேச்சு

சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.