மேலும்

நாள்: 3rd February 2019

தேசிய அரசில் இணையத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்

தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள யோசனை எதிர்வரும் 7ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் அதில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க மீதான பிடியாணை நீக்கம் – சிறிலங்கா வரவேற்பு

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணையை விலக்கிக் கொண்டிருப்பதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வரவேற்றுள்ளது.

சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா –  300 மில்லியன் டொலர் இந்தவாரம்

சீனாவிடம் பெறவுள்ள 2 பில்லியன் டொலர் கடனுதவியில், முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர் இந்த வாரம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று தகவல்கள்  தெரிவிக்கின்றன.

44 நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா போர்க்கப்பல்

பாகிஸ்தானில் 44 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் அமான்-2019 என்ற பெயரிலான பாரிய கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

பாலியல் வன்முறைகள், பாகுபாடுகள் குறித்த ஐ.நா நிபுணர் சிறிலங்கா வருகிறார்

பாலியல் நோக்கு நிலை மற்றும் பால்நிலை அடையாளத்தின் அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான, ஐ.நாவின் நிபுணரான விக்டர் மட்ரிகன் பொர்லோஸ்  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மாலியில் இருந்து சிறிலங்கா படையினரின் சடலங்களை கொண்டு வருவதில் இழுபறி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு சிறிலங்கா படையினரின் சடலங்களையும் கொழும்புக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.