பாதுகாப்பு உறவுகள் குறித்து சிறிலங்கா- அமெரிக்கா பேச்சு
சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பிலேயே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும், இந்தப் பேச்சுக்கள் சுமுகமாக இடம்பெற்றதாகவும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தரப்பில் இருந்து, இந்தப் பேச்சுக்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.