மேலும்

நாள்: 25th February 2019

கிளிநொச்சி போராட்டத்தில் குழப்பம் விளைவித்த ‘கறுப்புச் சட்டைக்காரர்கள்’

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில், கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு வந்த சிலர் குழப்பம் விளைவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கதறலால் கலங்கியது கிளிநொச்சி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  கவனத்தை ஈர்க்கும் நோக்குடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று காலை, பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

முழு அடைப்பு போராட்டத்தினால் முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தும் வகையில், இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால், வடக்கு மாகாணம் முழுவதும், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

உயர்மட்டக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடனான சோபா உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து – ஜேவிபி எச்சரிக்கை

அமெரிக்காவுடன், சோபா (SOFA) எனப்படும் படைகளின் நிலை குறித்த உடன்பாட்டில்,  சிறிலங்கா கையெழுத்திட்டால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ள ஜேவிபி, இது குறித்து நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அரசியல் உறுதியின்மையால் மோசமான நெருக்கடிக்குள் சிறிலங்கா – கோத்தா குற்றச்சாட்டு

அரசியல் உறுதியற்ற நிலை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, முடிவெடுக்கும் நடைமுறைகளில் உள்ள பலவீனம் ஆகியவற்றினால், நாடு இன்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் குறித்த ஆய்வு அறிக்கை விரைவில்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தொடர்பான றேடியோ கார்பன் அறிக்கை மிக விரைவில் கிடைக்கும் என்று புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு போட்டியாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேசிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமட் குரேஷி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.