மேலும்

நாள்: 23rd February 2019

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் சமந்தா பவர்

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய – சிறிலங்கா விமானப்படைத் தளபதிகள் சந்திப்பு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்- பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி

லண்டனில் புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவது போன்று எச்சரிக்கை செய்து, சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் குறித்தும், அவர் சிறிலங்காவுக்குப் புறப்பட்ட விடயத்தில் பிரித்தானியாவின் பங்கு குறித்தும், பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

சிஐடி விசாரணையை நிறுத்தக் கோரிய மகிந்த – நிராகரித்தார் சபாநாயகர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.

நாடாளுமன்ற குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், கடந்த ஆண்டு நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில், இடம்பெற்ற குழப்பங்களின் போது,  59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.