மேலும்

நாள்: 5th February 2019

பொறுப்புக்கூறலில் ஈடுபாடு இல்லை – சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி

பொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மாலியில் இருந்து சிறிலங்கா படையினரின் சடலங்கள் கொண்டு வரப்பட்டன

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளினதும், சடலங்கள் நேற்று பிற்பகல் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

சுதந்திர சதுக்கத்திலும் அமைதிவழி எதிர்ப்புப் போராட்டம்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நேற்றுக்காலை காலி முகத்திடலில் நடந்து கொண்டிருந்த போது, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், அமைதி வழி எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் பதவி விலகல்

கட்டார் நாட்டுக்கான சிறிலங்காவின் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவரை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புமாறு உத்தரவிட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

நாடாளுமன்றத்தில் இன்று நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.