மேலும்

நாள்: 19th February 2019

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – மகிந்த அணி கொந்தளிப்பு

மத்தல அனைத்துலக விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது ஏன் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை

பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாக, காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களில் இருந்து தென்னிந்தியாவுக்கு, விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோத்தாவே வேட்பாளர் – தேசியவாதிகளும், இடதுசாரிகளும் முடிவு

கோத்தாபய ராஜபக்ச தான், அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்து விட்டனர் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஆட்சியமைத்ததும் ஜெனிவா தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம் – ஜி.எல். பீரிஸ்

சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றில் மனு

மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த தேர்தல்கள் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீன வங்கிக் கடனில் இழுபறி –  பிணைமுறிகள் மூலம் 2 பில்லியன் டொலரை திரட்ட திட்டம்

சீன வங்கியிடம் இருந்து கோரப்பட்ட கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிணைமுறி சந்தையில் 2 பில்லியன் டொலர்களை திரட்டும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.