மேலும்

நாள்: 11th February 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் – சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க திட்டம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர்  வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச.

ரஷ்யாவிடம் எம்.ஐ-17 உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு  சிறிலங்கா பேச்சு

சிறிலங்கா விமானப்படைக்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்வது குறித்து, ரஷ்யாவுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது சிறிலங்கா அரசு

சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம், தூக்கிலிடுபவர் பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்தப் பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் இருப்பதாகவும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்துணிவு கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்குலக தூதுவர்களைச் சந்திக்கிறது கூட்டமைப்பு – ஜெனிவா செல்லவும் திட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.