மேலும்

மாதம்: March 2019

இந்தியாவின் நடுநிலையைக் கோருகிறார் விக்கி

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையை தமிழர்கள் கோருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் சிறிலங்கா கடற்படைத் தளபதி

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, தற்போது மூன்று நாட்கள் பயணமாக கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் தென்பிராந்திய தலைமையகத்தில் தங்கியுள்ளார்.

அட்மிரல் கரன்னகொட மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் நாள் மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – சுதந்திரக் கட்சி செவ்வாயன்று முடிவு

வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சந்தித்துப் பேசவுள்ளார்.

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு – லசந்தவின் சகோதரர் மறுப்பு

அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாம் எந்த வழக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என்று படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரான லால் விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

14 துறைசார் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தூதுவர்களாக நியமிக்கப்படுவதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்ட 14 துறைசார் இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

இராணுவத்தின் நல்லிணக்க பொறிமுறை – அமெரிக்க தூதுவர் விசாரிப்பு

நல்லிணக்க நடவடிக்கைளுக்கான சிறிலங்கா இராணுவத்தின் பொறிமுறை  தொடர்பாக, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் விசாரித்துள்ளார்.

மன்னாரில் கடற்பரப்பில் இரு எரிவாயு, இரு எண்ணெய் படிமங்கள் கண்டுபிடிப்பு

மன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா – சிறிலங்கா இணைந்து இடர்முகாமைத்துவ கூட்டு பயிற்சி

அவுஸ்ரேலிய – சிறிலங்கா படைகள் இணைந்து நான்கு நாள் மனிதாபிமான உதவி மற்றும் இடர் காப்பு தொடர்பான கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

கொழும்புக்கு புறப்படத் தயார் நிலையில் அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல்

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட, ஷேர்மன் என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் விரைவில் சிறிலங்கா கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.