அரச ஊடக நிறுவனங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் – பாதுகாப்பு அதிகரிப்பு
சிறிலங்காவில் கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர கூட்டம் ஒன்றை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்சவை சிறிலங்காவின் பிரதமராக இன்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதால், அரசியல் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இன்று மாலை ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம், ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சிக் கவிழ்ப்பு என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நிதியமைச்சரான மங்கள சமரவீர.
மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், தானே இப்போதும் பிரதமராக இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பிரதமராக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவியேற்றுள்ளார். ஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்தே, இந்த திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.
கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு விட்டுக் கொடுப்பதில்லை என்பதில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடாப்பிடியான நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் 200 சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றும், லெப்.கேணல் கலன அமுனுபுரவை, ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று திருப்பி அழைத்துக் கொள்வதாக, சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைவரான, முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளினதும், விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.