கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளிலும் கூட்டமைப்பு அமோக வெற்றி
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 வட்டார ரீதியான உறுப்பினர்களையும், 7 விகிதாசார ரீதியான உறுப்பினர்களையும் கொண்ட சாவகச்சேரி நகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காரைநகர் பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சுயேட்சைக் குழுவும் வட்டார ரீதியில் சமபலத்துடன் இருப்பதால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறை பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது. பிரதேசசபையின் மொத்தமுள்ள 12 வட்டாரங்களில், 8 வட்டாரங்களின் முடிவுகள் அதிகாரபூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று நடந்த தேர்தலில் வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம், குறைந்தளவு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு இன்னும் சற்று நேரத்தில் நிறைவடையவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் வாக்களிக்கும் காட்சிகள்.