மேலும்

பருத்தித்துறை பிரதேச சபையில் கூட்டமைப்பு முன்னணி – நகரசபையில் இழுபறி

tnaபருத்தித்துறை பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது. பிரதேசசபையின் மொத்தமுள்ள 12 வட்டாரங்களில், 8 வட்டாரங்களின் முடிவுகள் அதிகாரபூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 5 வட்டாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.  2 வட்டாரங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், 1 வட்டாரத்தில் ஈ.பி.டி.பியும் வெற்றி பெற்றுள்ளன.

அதேவேளை, பருத்தித்துறை நகரசபைத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி,  தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தலா 02 ஆசனங்களைப் பெற்றுள்ளன.  ஈ.பி.டி.பி 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *