மேலும்

மாதம்: January 2018

கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபரின் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு சட்டமா அதிபர் தரப்பின் விளக்கத்தையும் சிறிலங்கா உச்சநீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரபரப்பான சூழலில் இன்று அவசரமாகக் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரி கிழக்கு கடற்படைத் தளபதியுடன் முக்கிய பேச்சு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான கெல்லி பில்லிங்ஸ்லி திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகத்துக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கொக்காவிலில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் பலி

யாழ்.- கண்டி நெடுஞ்சாலையில் கொக்காவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

புர்கா, கறுப்புக் கண்ணாடி, முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு வாக்களிப்பு நிலையத்தில் தடை

முகத்தை மறைக்கும் ஆடைகள், மற்றும் பொருட்களை அணிந்து கொண்டு வாக்காளர்கள் எவரும் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க முடியுமா?- உச்சநீதிமன்றிடம் விளக்கம் கோரினார் மைத்திரி

தாம் 2021ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

பிரித்தானியா சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை?

சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முகநூலில் பிரபாகரனின் படத்துடன் புத்தாண்டு வாழ்த்து – தமிழ் இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை முகநூலில் பதிவேற்றிய இரண்டு இளைஞர்களை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அஞ்சல் மூல வாக்குகள் 11ஆம் நாள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் எதிர்வரும் 11 ஆம் நாள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொமடோர் தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கும் பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க மற்றும் ஐந்து பேரை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.