மேலும்

நாள்: 26th January 2018

குற்றவியல் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளார் கோத்தா- சட்டமா அதிபர்

வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதன் மூலம், பொதுச்சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச உள்ளிட்ட 6 பேர் தவறிழைத்துள்ளனர் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு அதிக முதலீட்டு வாய்ப்புகளை வழங்கத் தயார் – சிறிலங்கா அதிபர்

இன்னும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை ஜப்பானுக்கு வழங்க  சிறிலங்கா தயாராக இருக்கிறது என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் வீடு ஒன்றில் இருந்து 288 வாக்காளர் அட்டைகள் மீட்பு – இருவர் கைது

உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய, 288 வாக்காளர் அட்டைகள், முல்லைத்தீவில் வீடு ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன் விவாதிக்க முடியுமா?- சவால் விடுகிறார் சிறிலங்கா அதிபர்

ஊழல் மோசடிகள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்து உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியுமா என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

முதலமைச்சரால் முழந்தாளிட வைக்கப்பட்ட அதிபர் 7 மணிநேரம் சாட்சியம்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.