மேலும்

நாள்: 6th January 2018

முல்லைத்தீவில் கடற்படைத் தளம் அமைக்க 671 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க திட்டம்

முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு  671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அரசியல் கைதி ஒருவர் நீதிமன்றினால் விடுதலை

பாகிஸ்தான் தூதுவரை படுகொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க  கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவில் பரவும் காய்ச்சல் – அச்சமடையத் தேவையில்லை என்கிறார் மருத்துவ நிபுணர்

முல்லைத்தீவு பகுதியில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வடமாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு நிபுணர் மருத்துவ கலாநிதி ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவ ஜப்பான் இணக்கம்

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு சிறிலங்காவுக்கு முழுமையான ஆதரவை ஜப்பான் வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ, தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவருக்கு பகிரங்க பிடியாணை

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான ஜாலிய விக்கிரமசூரியவைக் கைது செய்ய கோட்டே நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

புதிய தேர்தல் முறை குறித்து 80 வீத வாக்காளர்களுக்கு போதிய விளக்கமில்லை

சிறிலங்காவின் புதிய தேர்தல் முறை தொடர்பாக 80 வீதமான வாக்காளர்கள் சரியான விளக்கமின்றி இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, பவ்ரல் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் சார்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.