மேலும்

நாள்: 9th January 2018

2021ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க முடியுமா?- உச்சநீதிமன்றிடம் விளக்கம் கோரினார் மைத்திரி

தாம் 2021ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

பிரித்தானியா சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை?

சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முகநூலில் பிரபாகரனின் படத்துடன் புத்தாண்டு வாழ்த்து – தமிழ் இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை முகநூலில் பதிவேற்றிய இரண்டு இளைஞர்களை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அஞ்சல் மூல வாக்குகள் 11ஆம் நாள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் எதிர்வரும் 11 ஆம் நாள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொமடோர் தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கும் பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க மற்றும் ஐந்து பேரை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

சாணக்யபுரி மாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு மாத்திரம் அழைப்பு

வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாட்டுக்கு சார்க் நாடுகளில் சிறிலங்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ராஜகிரிய மேம்பாலத்துக்கு சோபித தேரரின் பெயரைச் சூட்டுமாறு சிறிலங்கா அதிபர் பணிப்பு

ராஜகிரிய மேம்பாலத்துக்கு வண. மாதுளுவாவே சோபித தேரரின் பெயரைச் சூட்டுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜெனிவாவில் இருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத ஆரியசிங்க – மார்ச் அமர்வுக்கு முன் இடமாற்றம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு வரும் பெப்ரவரி 26ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அங்கிருந்து திருப்பி அழைக்கப்படவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தயா மாஸ்டர் மீது தாக்குதல் – கத்தி வெட்டில் இருந்து தப்பினார்

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைமையகத்தில் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய தயா மாஸ்டர் யாழ்ப்பாணத்தில் நேற்று தாக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாடசாலை அனுமதியில் மனித உரிமை மீறல் – சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு

தேசிய பாடசாலைகளுக்கான மாணவர்களின் அனுமதியில் சிறிலங்கா படையினர், காவல்துறையினர், மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை கொடுப்பது மனித உரிமை மீறல் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.