மேலும்

நாள்: 22nd January 2018

கேட்டது 12,000 மில்லியன் ரூபா – கிடைத்தது 2,500 மில்லியன் ரூபா

சிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் – உறவுகளை பலப்படுத்தப் போகிறாராம்

சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள செங் சுவேயுவான் நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், சீன- சிறிலங்கா நட்புறவுச் சங்கப் பிரதிநிதிகள், சீன தொழிற்துறை மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

இன்று கொழும்பு வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் – சுதந்திர வர்த்தக உடன்பாடு கைச்சாத்து

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே சிங்கப்பூர் பிரதமர் இன்று கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கைது செய்யப்படவுள்ளார் ரவி கருணாநாயக்க?

சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பூதாகாரமாகும் பாடசாலை அதிபர் அவமதிப்பு விவகாரம் – இக்கட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி

பதுளை தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்த ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள அதேவேளை, மாகாண கல்வி அமைச்சர் பதவியில் இருந்து அவர் நேற்று விலகினார்.