மேலும்

நாள்: 23rd January 2018

பெண் அதிபரை மண்டியிட வைத்த ஊவா முதலமைச்சர் கைது

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்து மன்னிப்புக் கோரச் செய்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிசில் அடைக்கலம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக, சுவிஸ் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேர் மற்றும் ஒரு முதலமைச்சருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கையளிக்கவுள்ளனர்.

அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது என்றுமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிய ஜப்பானின் 70 பிரதிநிதிகள் சிறிலங்கா வருகின்றனர்

ஜப்பானின் முன்னணி வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் 70 பேரைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிங்கப்பூர் பிரதமருக்கு சிறிலங்காவில் வரவேற்பு

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று மாலை சிறிலங்காவை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிங்கப்பூர் பிரதமரை, சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

விசாரணை அறிக்கைகளை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடிவு

ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.