மேலும்

நாள்: 18th January 2018

‘ஒப்பரேசன்-2’ ஆரம்பம் – என்கிறார் மைத்திரி

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பான தனது இரண்டாவது கட்ட நடவடிக்கை (ஒப்பரேசன்-2) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல் சம்பவம்- சிறிலங்கா இராணுவத் தளபதியின் ஒத்துழைப்பை கோருகிறார் மனைவி

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணைகளுக்கு உதவுமாறு அவரது மனைவி  சந்தியா எக்னெலிகொட, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம், கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவார் மைத்திரி – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக மீண்டும் போட்டியிடுவார் என்று சிறிலங்கா சுமந்திரக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்புக்கு முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இருந்து குறைந்தளவு விண்ணப்பங்கள்

உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்தே, குறைந்தளவினலான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர், பிரதமருடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஜாவிட் பஜ்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிணைமுறி மோசடி அறிக்கை இணையத்தில் வெளியானது

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை, இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.