மேலும்

நாள்: 19th January 2018

சீனா- இந்திய உறவுகளை சீர்படுத்துவாரா கோகலே? – சீன ஊடகத்தின் பார்வை

சீனாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் விஜய் கோகலேயை இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது இந்திய வெளியுறவுச் செயலராகப் பதவி வகிக்கும் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக் காலம் ஜனவரி 28ல் முடிவுறவுள்ள நிலையிலேயே இந்திய அரசாங்கம் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோக்கலேயை நியமிப்பது தொடர்பாக அறிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவுக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை

நாவற்குழியில் சிறிலங்கா படையினர் 24 இளைஞர்களைக் கைது செய்து காணாமல் ஆக்கிய  சம்பவங்கள் தொடர்பாக தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி, யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் – கருத்து வெளியிட முதலமைச்சர் மறுப்பு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து எதையும் வெளியிட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

உதயங்க வீரதுங்கவின் 94 மில்லியன் ரூபா சொத்துக்கள் கண்டுபிடிப்பு

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் 94 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அறிக்கையில் 103 பக்கங்களைக் காணவில்லை – கம்மன்பில

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான நீதிபதி கே.ரி.சித்ரசிறி தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையின் 103 பக்கங்கள் காணாமல் போயிருப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.